search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எம்எல்ஏ ஜார்ஜ்"

    பிஷப் மீது பாலியல் புகார் கூறிய கன்னியாஸ்திரியை மோசமாக விமர்சித்ததற்காக கேரள சுயேட்சை எம்எல்ஏ ஜார்ஜ் வருத்தம் தெரிவித்துள்ளார். #KeralaNun #PCGeorge
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் பிராங்கோ முல்லக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் அளித்தார்.

    அதன் பேரில் ஜலந்தர் சென்ற திருவனந்தபுரம் போலீசார், பி‌ஷப் பிராங்கோ முல்லக்கல்லிடம் விசாரித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
     
     ஜலந்தர் பிஷப் மீது நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விவகாரம் பெரிதாக வெடித்த நிலையில், பிஷப்புக்கு ஆதரவாக பேசிய சுயேட்சை எம்.எல்.ஏ, பாதிக்கப்பட்ட கன்னியாஸ்திரியை விபச்சாரி என மோசமாக விமர்சித்தார்.

    இதற்கு பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்தன. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என தேசிய மகளிர் ஆணையம் ஜார்ஜ்க்கு சம்மன் அனுப்பியது. இந்நிலையில், தான் உணர்ச்சி வசப்பட்டு அப்படி கூறி விட்டதாக ஜார்ஜ் இன்று தெரிவித்துள்ளார்.

    “என்னை பொறுத்த வரை அவர் கன்னியாஸ்திரியே இல்லை. எனினும், நான் அத்தகைய வார்த்தையை பயன்படுத்தி இருக்க கூடாது’ என ஜார்ஜ் இன்று கூறியுள்ளார்.

    இதற்கிடையே, பிஷப் பிராங்கோ வரும் 18-ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என கேரள போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். 
    கேரளாவில் கன்னியாஸ்திரியை பாதிரியார் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படும் விவகாரத்தில் பாதிரியாருக்கு ஆதரவாக எம்.எல்.ஏ ஜார்ஜ் பேசிய கருத்து சர்ச்சைக்கும் கண்டனத்துக்கும் உள்ளாகி வருகிறது. #JalandharBishop #FrancoMulackal #MLAGeorge #Kerala
    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரத்தைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர் ஜலந்தரில் பிஷப்பாக இருக்கும் ஃப்ராங்கோ மூலக்கல் என்பவர் தன்னை 2014 முதல் 2016 வரை கேரளாவில் உள்ள ஒரு கான்வெண்டில் வைத்து தனது ஒப்புதலின்றி 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார்.

    இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த திருவனந்தபுரம் போலீசார், ஜலந்தர் பகுதிக்கு சென்று பிஷப் ஃப்ராங்கோ மூலக்கல்லிடம் விசாரணை மேற்கொண்டனர். இருப்பினும் அவர் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதையடுத்து பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறையை கண்டித்து கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் திருவனந்தபுரம் நீதிமன்ற வளாகம் அருகில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பாலியல் வன்கொடுமை செய்த பாதிரியார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் அப்போது வலியுறுத்தினர்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜ் கூறிய கருத்து கடும் சர்ச்சைக்கும், கண்டனங்களுக்கும் உள்ளாகி வருகிறது. இதுதொடர்பாக அவர் கூறுகையில், "கன்னியாஸ்திரி ஒரு பாலியல் தொழிலாளி என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. பாதிரியார் அவரை 13 முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறுகிறார். 12 முறை வன்கொடுமை செய்த போது எந்த புகாரும் அளிக்காத அவர், 13 வது முறை மட்டும் வன்கொடுமை செய்து விட்டதாக புகார் அளித்துள்ளார். முதல் முறை வன்கொடுமை செய்யப்பட்ட போதே அவர் புகார் அளிக்காதது ஏன்?’ என கேள்வி எழுப்பியுள்ளார்.



    சுயேட்சை எம்.எல்.ஏ. ஜார்ஜின் இந்த கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையத்தின் கேரள தலைவர் ரேகா ஷர்மா, ‘பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு உதவாமல், எம்.எல்.ஏ. இதுபோன்ற கருத்துக்களை கூறியிருப்பது கண்டு வெட்கப்படுகிறேன். இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுதொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு கடிதம் எழுதப்படும்’ என தெரிவித்துள்ளார். #JalandharBishop #FrancoMulackal #MLAGeorge #Kerala
    ×